கதைகள் என்றாலே கற்பனை என்று நினைக்கிறோம் நாம். அப்படியல்ல. கதைகளில் பலவகைக் கதைகள் உள்ளன, சிறுவர்களுக்கு நீதி புகட்டக் கூடிய கதைகள், உண்மைக் கதைகள், மக்களை அறிவு புகட்டி மாக்கள் என்னும் நிலைமையிலிருந்து இன்னும் தெளிவான மக்களாக்கும் விதமாக கற்பனைக் கதைகள், சிறு கதைகள் போன்ற பலவகைக் கதைகள் எழுதலாம. அது மட்டுமல்ல, நீதிக் கதைகள் எழுதலாம், விஞ்ஞானக் கதைகள், அறிவியல் கதைகள், நகைச்சுவைக் கதைகள், திகில் கதைகள், ஒரு நிமிடக் கதைகள், பசரித்திரக் கதைகள், வரலாற்று சம்பவங்களை நம் கற்பனைகளைக் கலந்துஅதன் மரபு கெடாமல் கதைகளாக்கி அனுப்பலாம்,புதிர்க் கதைகள், நவீன யுத்திக் கதைகள் போன்ற பலவற்றை எழுதலாம்.
