The people of India
இந்திய மக்கள்

ஆசிரியர்: தமிழ்த்தேனீ
India is rich in it's culture and heritage with various arts, religion and languages. India has given birth to great leaders history will ever remember. Let us work together to bring prosperity to Mother India overcoming all hurdles whatever be the cause.

Custom Search
 |  இல்லம்  |  கலைகள்  |  இலக்கியம்  |  கதைகள்  |  கவிதைகள்  |  கட்டுரைகள்  |  அரசியல்  |  செய்திகள்  |  பின்னூட்டம்  | 
HOME


Favorites

Achalam.com
Mazhalaigal.com
Kalakad.org
Healthcareall.org
Brahmin Today.org
Artistkidworld.com
Thamizhisai.com
Young Poet.org
ACOE.co.in
RCC pipes.com
CIT76.com
CIT India.com
KTVR.com
Nilacharal.com
Azhagi.com

Contact us at: contact@peopleofindia.net or peopleofindia.net@gmail.com         பாரத சமுதாயம் வாழ்கவே









ஸ்ரீமத் பகவத் கீதை - பாகம் 2

முத்து ஐயர்

எந்தவொரு குழந்தையிடமும் அதிகம் பற்றும், பாசமும் கண்மூடித்தனமாக வைக்க்க் கூடாது என்பதற்கு த்ருதராஷ்ட்டிரன் ஓர் உதாரணம். அதனால்தான் அவன் மஹாபாரத்த்தில் ஒரு குருடனாக சித்தரிக்கப் பட்டுள்ளான். த்ருதராஷ்ட்டிரன் அவன்மீது அளவுகடந்த பற்றுவைத்து அவன் என்ன செய்ய நினைத்தாலும் அவனை செய்யச்சொல்லி, சில வற்றை மறுத்தாலும் பிறகு தன் பிள்ளைப்பாசம் மேலிட, அதற்கும் அவனோடு சென்று அதை ஆதரித்து, இன்று அது மஹாபாரதப் போர் வரை கொண்டுவந்து விட்ட்து.

ஒரு தம்பதிகள் அன்பாகத்தான் இருப்பார்கள். ஆனால் ஒரு நாள் சின்ன விஷையத்துக்காக் கணவன் மனைவிக்குள் சண்டைவரும். அதில் கணவனோ அல்லது மனைவியோ அடங்கிப்போய் பிறகு அந்த சண்டைக்கு காரணமாயிருந்த ஒன்றை இருவரும் அலசிப்பார்த்தால் பிறகு வாழ்க்கை சுகமாகப் போகும். அதுவன்றி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் அந்த சண்டை வளர்ந்தால் பின் கணவன் வாயாவார்த்தையாய் "நீ உன் பிறந்தவீட்டுக்கே போய்க்கொள்" என்று கூற அவளும் அந்த நிலையிலும் தன்னை அடக்கிக் கொள்ளாமல், "ஓஹோ! அப்படியா? இதோ இப்பவே போகிறேன்" என்று கிளம்பிப் போய்விட்டால், அங்கு அவளும், இங்கு இவனும் அமைதியில்லாமல் தவிப்பார்கள். அதுபோலத்தான் இங்கு பாண்டுவின்மீது வளர்ந்த த்வேஷத்தை அந்தப் பிள்ளைகள்மீதுகாட்ட எண்ணி தன் மகன் துரியோதனின்மீது கண்மூடித்தனமாகப் பாசம் வைத்து, மஹாபாரத்ப்போர் மூண்டவுடன் இப்போது பின் கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டு அங்கும் இங்கும் நடந்துகொண்டிருக்கிறான் த்ருதராஷ்ட்டிரன்.

அப்போது வ்யாஸ பகவான் வந்து, "உன் துடிப்பு எனக்குப் புரிகிறது. என்ன செய்வது இனி இதைத் தடுக்க இயலாது. சண்டையென்று வந்தால் வெற்றி ஒருவருக்கு நிச்சயம். ஆகவே, நீ இந்தப் போரை இங்கிருந்தே பார்க்க வேண்டுமென்றால் உனக்குமட்டும் இந்த சமயத்திற்காகமட்டும் உனக்கு ஒரு திவ்ய த்ருஷ்டியைத் (பார்வையைத்) தருகிறேன்," என்று கேட்கவே "எனக்கு வேண்டாம், அந்தப் போரை இங்கிருந்தே பார்க்கும் சக்தியைமட்டும் ஸஞ்சையருக்கு அருளிவிட்டுப் போம். பிறகு அவரிடமிருந்து நான் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன்", என்று கூறவே அவ்வண்ணமே வ்யாஸ பகவான் ஸஞ்சயனுக்கு அருளிவிட்டுப் போனார்.

வியாஸ பகவான் யார் என்பதை விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் ஒரு ஸ்லோகத்தில் விவரிக்கிறார் பீஷ்ம பிதாமஹர்.

"வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம:"

இப்படிப்பட்டவர் தான் மஹாபாரதம் எழுத விநாயகரை அழைத்தபோது உடனே ஒடிவந்தார் அந்த தொந்திக்கணபதி என்றால் அது மிகையாகாது. அதுமட்டுமின்றி அந்தப் பிள்ளையார் சிவன், விஷ்ணு என்ற இருவருக்கும் சொந்தப்பிள்ளை என்பதும் நன்கு விளங்குகிறதல்லவா?

இப்படியாக அந்த திவ்ய த்ருஷ்டியைப் பெற்ற சஞ்சையரை, போரில் பத்தாவது நாள் பீஷ்மர் சாய்ந்து அம்புப்படுக்கையில் படுத்தபோதுதான் த்ருதராஷ்ட்ரன் ஆரம்பத்திலிருந்து அதுவரை நடந்த்தைச் சொல்லக் கேட்கவே பதினோராவது நாள் சஞ்சையர் கீதையை எடுத்துரைத்த்தாக மஹாபாரதம் கூறுகிறது.

கீதா உபதேசம் தொடரும்.

பாகம் 1





Designed and maintained by: AKR Consultants