The people of India
இந்திய மக்கள்

ஆசிரியர்: தமிழ்த்தேனீ
India is rich in it's culture and heritage with various arts, religion and languages. India has given birth to great leaders history will ever remember. Let us work together to bring prosperity to Mother India overcoming all hurdles whatever be the cause.

Custom Search
 |  இல்லம்  |  கலைகள்  |  இலக்கியம்  |  கதைகள்  |  கவிதைகள்  |  கட்டுரைகள்  |  அரசியல்  |  செய்திகள்  |  பின்னூட்டம்  | 
HOME


Favorites

Achalam.com
Mazhalaigal.com
Kalakad.org
Healthcareall.org
Brahmin Today.org
Artistkidworld.com
Thamizhisai.com
Young Poet.org
ACOE.co.in
RCC pipes.com
CIT76.com
CIT India.com
KTVR.com
Nilacharal.com
Azhagi.com

Contact us at: contact@peopleofindia.net or peopleofindia.net@gmail.com         பாரத சமுதாயம் வாழ்கவே









ஆண்டாளின் பிறந்த நாள்

இந்தச் சிறந்த நாளான ஆடிப்பூரத்தில் இந்த மடலைத் தொடங்குகிறேன் ஆடிப்பூரம் ஆண்டாளின் பிறந்த நாள். இந்நாளிலே அவரது ஆசிகளுடன் இது தொடங்குவதில் மிக மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனால் இநத் நாளின் சிறப்பைப் பற்றிக் கூற விரும்புகிறேன்.

ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியார் ஆடி மாதம் வளர்பிறை சதுர்தசியில் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் அவதரித்தப் புண்யத்திருத்தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர். ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனிடம் ஐக்கியமானது ஆத்மா பரமாத்மாவுடன் சேரும் நிலைமை. ராதா கிருஷ்ண பக்தியும் இதுதான்.

ஆடிப்பூரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்த் திருவிழா நடக்கும், மிகப்பெரியத்தேர். தமிழகத்திலேயே மூன்றாவது இடம் வகிக்கிறது இந்தத் தேர். இதில் பல தெய்வங்கள் ரிஷிகள் முனிவர்கள் செதுக்கப்பட்டுள்ளன. தவிர ராமாயணம் மகாபாரதத்திலிருந்தும் காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேரின் வடத்தை இழுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்கள் தேவைப் படுகிறார்கள்.

தேரின் உயரம் சொல்ல முடியாத அளவு தான், அநேகமாக கோபுரத்தைத் தொட்டு விடும். இந்தத் தேரை வானமாமலை ஜீயர் வழங்கினாராம். தேரில் ஸ்ரீரங்கநாதரும் ஸ்ரீ ஆண்டாளும் பவனி வருவார்கள். கோயில் முகப்பில் சற்று நின்று பின்னர் திருப்பூர மண்டபத்திற்கு வந்து அருள் புரிவார்கள். ஆடிப்பூரத்தின் ஏழாம் நாள் ஸ்ரீ ஆண்டாள் ஒரு காலைக் கிடத்தி மறுகாலை மடக்கி இருக்க, பெருமாள் தன் தலையை அவள் தொடையில் வைத்துச் சயனித்திருப்பார்.

இந்தக் காட்சியைக் காண அழகே அழகு!

ஆடிப்பூரத்தில் பனை ஓலைக் குருத்துக்களால் ஆன தேர் ஒன்று தஞ்சாவூரிலிருந்து வந்து சேரும். பதினாறு கால்களைக் கொண்ட அந்தச் சப்பரத் தேரை பல வல்லுனர்களும், கைதேர்ந்த கலைஞர்களும் வடிப்பார்கள். பதினாறு கால்கள், பதினாறு வகைச் செல்வங்கள், தரும் என்ற நம்பிக்கைதான் ஆடிப்பூரத்தின் மகிமையைச் சொல்லி இயலாது அம்மன்

கோயிலில் வளைகளாலேயே அலங்கரிக்கப்பட்டுக் காட்சி அளிப்பாள். புட்டுதான் இன்று அவளுக்குப் பிரசாதம். இந்நாளில் தொடங்கும் இந்த இந்திய மக்கள் தளம் முன்னேறி வளம் காணட்டும். வாழ்க வளமுடன்!

அன்புடன் விசாலம்





Designed and maintained by: AKR Consultants