The people of India
இந்திய மக்கள்

ஆசிரியர்: தமிழ்த்தேனீ
India is rich in it's culture and heritage with various arts, religion and languages. India has given birth to great leaders history will ever remember. Let us work together to bring prosperity to Mother India overcoming all hurdles whatever be the cause.

Custom Search
 |  Home  |  Arts  |  Literature  |  Stories  |  Poems  |  Articles  |  Politics  |  NEWS  |  Feedback  | 
HOME


Favorites

Achalam.com
Mazhalaigal.com
Kalakad.org
Healthcareall.org
Brahmin Today.org
Thamizhisai.com
Young Poet.org
RCC pipes.com
CIT76.com
Azhagi.com

Contact us at: contact@peopleofindia.net or peopleofindia.net@gmail.com         பாரத சமுதாயம் வாழ்கவே










பாதை தெரியவில்லை

போன மாதம் வாசலில் கடமுட என்ற சத்தம் வந்தது. என்னவென்று பார்க்கப் போனேன். ரோடு ரோலர் என் வீட்டு வாசலில் இருந்த தெருவை சரியாக்கி கொண்டிருந்தது. பள்ளம் இருந்த இடத்தில் ஒட்டுப் போட்டது. சுடச்சுட தார் ஊற்றி, உடைந்த சிறு கற்களைப்போட்டு ஒரு இழுப்பு இழுத்தது ராட்சச ரோலர், ஆனல் திருஷ்டி பட்டாற்போல், ஒரு வாரத்திற்குள் மழை வந்து ஒரு பத்து நிமிடங்களில் போட்ட கற்கள் எல்லாம் இடத்தை விட்டுப் பெயர்ந்து குண்டும் குழியாக ஆகிவிட்டது. இது என் வீட்டு வாசலில் மட்டுமில்லை, முகப்பேர், கோயம்பேடு என்று பல இடங்களின் கதியும் இதேதான். ஏன் இந்தத் தொழ்லாளிகள் போடும் ரோடு ஒரு சின்ன மழையிலேயே பெயர்ந்து நடபவர்களுக்குக் கஷ்டத்தைத் தருகிறது? ரோடு போடப் பல லட்சங்கள் முனிசபல் கார்ப்பரேஷன் வாங்கிக்கொண்டாலும் தெருவை நன்கு செப்பனிட மனதில்லாமல் ஏனோ தானோ என்று வேலை செய்கிறது, இது ஏன்? இது போல் சமமில்லாமல் இருக்கும் தெருவில் நடக்க, கழுத்து வலி, இடுப்பு வலிகள் அதிகமாகின்றன். எங்கள் வாசல் கேட்டில் வேப்ப மரம் விழுந்து, அதனால் அந்தக் கதவையே திறக்க முடியாமல் ஒரு வாரம் அவஸ்தைதான். பல தடவைகள் ரிபோர்ட் செய்தாலும், "பெரிய டெம்போ இல்லை சார், அது வரும் போது அனுப்புகிறேன்" என்று சொல்ல ஒரு பத்து நாடகள் அதை அகற்றவே இல்லை. இதே போல் எல்லாம் ஆமை வேகத்தில் நடந்தால் சுகாதாரத்திற்குக் கேடு அல்லவா?

முன்பு நான் காரில் பெங்களூரு போயிருந்தேன். அப்போது வரகூர், கிருஷ்ணகிரி வழியில் பரிசோதனைக்காக பிளாஸ்டிக் ரோடு போடப்பட்டு மிகவும் அழுத்த்மாகவும் சமாமாகவும் மிகப் பிரமாதமாக்ப் இருந்தது. முன்னாள் முதல் மந்திரி சௌ ஜயலலிதா அவர்கள் இந்தப் பரிசோதனையைச் செயலாக்கினார். இதிலும் வெற்றியும் கண்டார். பின் ஆட்சி மாறியவுடன் அதுவும் கிணற்றில் போட்டக் கல் போல் ஆனது. சென்னையில் தான் அதிக பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குப்பைகள். நிறைய கிடைக்கின்றனவே, இதை வைத்து எல்லா ரோடையும் பிளாஸ்டிக ரோடாக மாற்றினால் மழைக்காலத்தில் ஒரு பிரச்சனையும் வராமல் இருக்கும். மும்பயில் 5 மாதங்கள் விடாமல் மழை ஆனாலும் டிரைய்னேஜ் அழகாக அமைக்கப்பட்டிருபதால் உடனேயே மழை நீர் வடிந்த்தும் விடுகிறது.

தவிர டெலிபோன் கேபிள் போடக் குடைந்து அதை அப்படியே இலேசாக மண் போட்டு அந்தக் குழியை அடைத்து விடுவதால் மழைக்காலத்தில் அங்குக்கால் வைக்க கால் புதைந்து அதனால் கீழேயும் விழுகின்றனர். இந்தக் கேபிள் போடுவதோ அல்லது வேறு பழுதைச் சரிப்பார்ப்பதோ வெயில் காலத்தில் செய்து பின் அதை நன்றாக அடைக்க பிரச்சனைகள் வராது. தவிர பூமியை உடைக்க ஒரு சாரார் வந்து பள்ளம் செய்துவிட்டுப் போய்விடுகின்றனர். அதை அடைத்து நல்ல தெருவாக மாற்றுவது வேறு ஒரு சாராரின் வேலை என்பதால் முதலில் பள்ளம் தோண்டியவர்கள் அம்போ என்று விட்டுவிட்டுப் போய்விடுவதால் மழைக்காலத்தில் பலர் அந்தப் பள்ளத்தில் காலை வைத்து விபத்துக்குள்ளாகின்றனர்.

சில இடங்களில் மின்சாரப் பெட்டிகள் தெருவில் திறந்து இருப்பதால் மழைத் தண்ணீரும் அங்குப் பெரிய ஆபத்தை விளைவிக்கிறது. முனிசிபால்டி, முனிசிபல் கார்ப்பரேஷன் இருவரும் சேர்ந்து செயல் பட இந்தப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

அன்புடன் விசாலம்

துபாயில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவில் வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிலையில், பலேசோ வெர்சாஸ் ஓட்டல் அருகே கடற்கரை மணலுக்கு அடியில் பைப்கள் மூலம் ஏர்கண்டிஷனர் வசதி செய்யப்படுகிறது. அதன் மூலம் கோடைக் காலத்தில் மணலின் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டு பட்டப்பகல் 12 மணிக்கு கூட கடற்கரையில் காலாற நடை போடலாம். ஒரு கடற்கரையையே குளிர்சாதன வசதி செய்கிறார்கள்,அதுவும் எங்கே பாலைவனத்தில், அங்கு கோடையில் வெயில் 50 டிகிரிக்கு கொளுத்தும். ஆனால், பலேசோ வெர்சாஸ் ஓட்டலைச் சுற்றிய மணல் பகுதிகள் ஜில்லென்று இருக்கும். இந்த வசதி அடுத்த ஆண்டோ 2010ம் ஆண்டோ நடைமுறைக்கு வரும் என்று ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்மூலம், உலகின் முதல் ஏசி கடற்கரையை துபாய் பெறுவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, சுற்றுலாப் பயணிகள் குவியும் துபாயில், சுற்றுலா வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குளிரூட்டப்பட்ட கடற்கரை மூலம் கோடையில் பயணிகள் வருவாய் அதிகரித்து பல ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என துபாய் அரசு எதிர்பார்க்கிறது.

மனதிருந்தால் மார்க்கமுண்டு என்பதற்கு பாலைவனப் ப்ரதேசமாயிருக்கும் துபாயில் மக்கள் வசதிக்காக இப்படியெல்லாம் செய்யமுடியும் என்றால் எல்லா வளங்களும் இருக்கும் நம் நாட்டில் இன்னும் ஒரு சாலையைக் கூட சரியாகப் போடாமல் சாக்கடை கொப்பளித்து சாலைகளில் வழிந்து நாடே நாறிக் கொண்டிருக்கிறதே. சாலைகளில் நடந்தாலோ, காரில் சென்றாலோ இருசக்கர வாகனத்தில் சென்றாலோ அத்துணை வியாதிகளும் ஒட்டிக் கொள்கின்றனவே மக்களுக்கு. என்னதான் செய்கிறது அரசாங்கம்? எப்போது விழித்துக்கொள்வோம் நாம்?

அன்புடன்
தமிழ்த்தேனீ





Designed and maintained by: AKR Consultants