-
ஜாதீயம் - மதச்சார்பின்மை
திருமதி இந்திரா காந்திக்கு சீக்கியர்கள் பேரில் எந்தவிதக் காழ்ப்புணர்வும் இல்லையெனக் காட்ட திரு ஜெயில்சிங்கிற்கு (அதற்குத் தகுதியே இல்லாத பொழுதும்) ஜனாதிபதி பதவி தரப்பட்டது.
நமது முன்னாள் ஜனாதிபதி திரு நாராயணன், 30 வருடங்களுக்கும் மேல் வெளியுறவுத்துறையில் நல்ல பொறுப்பான பதவியிலிருந்து நாட்டிற்கு நல்ல பெயர் வாங்கித்தந்தவர். படித்தவர். பண்புள்ளவர். ஊழலில் சிக்காதவர் எனப் பெயரெடுத்தவர், இருப்பினும் அவரது இத்தகு தகுதிகளுக்காக அவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததாக நம்து அரசியல்வியாதிகள் கூறவில்லை. மாறாக ஒரு தலித் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் அமர்த்தத் தாங்கள் உதவியதாகவே குறிப்பிட்டார்கள்.
திரு அப்துல் கலாம் கூட அவர் ஒரு சிறப்பான அணுசக்தி விஞ்ஞானி என்பதாலோ, மிக நல்ல மனிதநேய உணர்வுடையவர் என்பதாலோ ஒரு நல்ல ஆசிரியர் என்பதாலோ ஜனாதிபதி ஆக்கப்படவில்லை. பாரதீய ஜனதாவிற்கு இஸ்லாமியர்கள் பேரில் வெறுப்பில்லை என்பதைக் காட்டவும், மற்ற கட்சிகளும் இதற்கு மாற்று சொல்ல முடியாது என்று அக்கட்சி நினைத்தாதாலேயே தரப்பட்ட ஒரு வெகுமதி என்பது இந்திய அரசியலை நன்கு அறிந்தவர்களுக்குப் புரிந்திருக்கும். அவர் தங்களது தில்லுமுல்லுகளுக்கு ஒத்து வரமாட்டார் என்பதாலும், இனி அவர் ஒரு இஸ்லாம் என்ற நிலை அதிகம் தங்களுக்குப் பயனில்லை என்ற நிலை வந்தவுடன், இரண்டாம் முறை அவருக்கு (எல்லாச் சிறப்பும் உடையவர் என்று காங்கிரசே சொன்னாலும்) அப்பதவி தரப்படவில்லை.
பொதுவாக ஆளும்கட்சிக்கு உதவும் நபர்களுக்கு சலுகை காட்டவே ஜனாதிபதி, கவர்னர் மற்றும் மேலவை (ராஜ்ய சபா) உறுப்பினர் பதவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதில் படிப்பு, மனிதநேயம், ஊழலற்ற பேர்வழி போன்ற பிற தகுதிகள் எவ்வளவுதான் இருந்தாலும், தலித், இஸ்லாமியர், கிருத்தவர் என்பதெல்லாம் மட்டுமே குறிப்பாகச் சொல்லப்படும் தகுதிகள்
இதுதான் இந்திய அரசியல். இனம் மதம் மொழி என்பதைச் சொல்லியே மக்களை மூளைச்சலவை செய்ய முடியும். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!
அன்புடன், செபரா
