The people of India
இந்திய மக்கள்

ஆசிரியர்: தமிழ்த்தேனீ
India is rich in it's culture and heritage with various arts, religion and languages. India has given birth to great leaders history will ever remember. Let us work together to bring prosperity to Mother India overcoming all hurdles whatever be the cause.

Custom Search
 |  Home  |  Arts  |  Literature  |  Stories  |  Poems  |  Articles  |  Politics  |  NEWS  |  Feedback  | 
HOME


Favorites

Achalam.com
Mazhalaigal.com
Kalakad.org
Healthcareall.org
Brahmin Today.org
Thamizhisai.com
Young Poet.org
RCC pipes.com
CIT76.com
Azhagi.com

Contact us at: contact@peopleofindia.net or peopleofindia.net@gmail.com         பாரத சமுதாயம் வாழ்கவே











செய்தித்தாள் = நவீன ஜால்ரா

சந்தையில் விற்பனையாகும் எந்த ஒரு பொருளின் விற்பனை அதிகரித்தாலும் அந்நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கும்... ஆனால் அச்சு ஊடகத் துறையானது இதற்கு 180 கோண வித்தியாசமானது! அதிக விற்பனை என்றால் அதிக இழப்பு!! என்ன இது உளறல் என நினைக்கிறீர்களா..? சரி சின்ன கணக்கின் மூலம் தெளிவுப்படுத்துகிறேன்.

ஊடக நிறுவனத்தின் செலவுகள் வருமாறு...

செய்தி அச்சடிக்க ஆகும் செலவு =(ஒரு பிரதி) ரூ. 6.00

நிர்வாக‌ச் செல‌வு = ரூ. 5.00

மொத்த‌ம் = ரூ.11.00 ---------------- ஒரு இதழ் அச்சடிக்க ஆகும் செலவு ரூ.11.

ரூ.3க்கு பத்திரிகை விற்பனை செய்கிறார்கள் என்றால், அதில் ரூ.1.50 வரை விற்பனைச் செலவுகளுக்கு போய்விடும். ஆக மொத்தத்தில் ஒவ்வொரு பிரதிக்கும் ரூ.10 வரை இழப்பைச் சந்திக்கிறார்கள்!!! சரி இதைத்தான் விளம்பரங்களின் மூலம் வரும் வருமானத்தில் ஈடு செய்துவிடுவார்களே என நீங்கள் கேட்பது புரிகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் செய்தித்தாள் விற்பனையானால் லாபம்தான். ஆனால் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் லாபத்திலிருந்து நஷ்டத்திற்கு மாறுகிறது..!!

மொத்த பிரதிகள் = 1 லட்சம்
மொத்தச் செலவு = ரூ.11 * 1 லட்சப் பிரதிகள் = ரூ.11,00,000.00
விள‌ம்ப‌ர‌த்தின் மூல‌ம் கிடைக்கும் வ‌ருமான‌ம் = ரூ.10 ல‌ட்ச‌ம்
ப‌த்திரிகை விற்ப‌னை மூல‌ம் கிடைப்ப‌து = ரூ.1.5 ல‌ட்ச‌ம்
(விற்ப‌னைச் செல‌வு க‌ழித்து)
நிகர லாபம் = மொத்தச் செலவு ‍‍மொத்த வருமானம்
= ரூ.11 லட்சம் கழித்தல் ரூ.11.5 லட்சம்
= ரூ.50,000.00 லாபம்
சரி, ஒரு லட்சம் பத்திரிகை விற்றால் ரூ.50,000 லாபம்...3 லட்சப் பிரதிகள் விற்றால்...?

மொத்தம் 3 லட்சப் பிரதிகளுக்கு = ரூ.33,00,000.00
விளம்பர வருமானம் = ரூ.11,00,000.00
விற்பனை வரவு = ரூ. 4,50,000.00
ஆக நிகர நஷ்டம் = ரூ.17,50,000.00

ஏறத்தாழ முதலீட்டில் 50% நஷ்டம்..!! சரி இவ்வளவு பெரிய இழப்பிலும் எல்லா செய்தி நிறுவனங்களும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தோடு விலையை குறைத்துக் கொண்டே வருகின்றன!!! இவர்களின் வியாபார உத்தி பின் கிணத்தடியில் கொழுந்தியாளைத் தேடுவது போல்தான்...!!!

விற்பனையை அதிகரிப்பதன் மூலம் விளம்பர வருவாயை அதிகரிக்க செய்தி நிறுவனங்கள் முயற்சி செய்கிறார்கள். இப்படி வரும் விளம்பரங்களுக்காக செய்திகளுக்கான இடங்களை விற்றுவிடுகிறார்கள்..!! விளம்பரம் அதிக அளவில் கொடுக்கும் பண முதலாளிகள் செய்திகளையும் தங்களுக்கு சாதகமாக எழுதச் செய்கிறார்கள்..!! இப்படி சமரசம் செய்து கொள்ளாத ஊடக நிறுவனம் வருமானம் இழப்பின் காரணமாக விலையைக் குறைக்காததால் நாளடைவில் வாசகர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்குகிறது..!!

செய்தித் துறையின் இந்தப் போக்கு அவர்களுக்கு மட்டுமல்ல வாசகர்களுக்கும், தேசத்திற்கும் ஆபத்தானதுதான்..!! மும்பைத் தாக்குதல் போன்ற செய்திகள் நம் மனதைப் பாதிப்பது போல் செய்தி நிறுவனங்களால் செய்யப்படும் சமரசங்கள், அதே போன்ற சமரச மனத்தையும் உருவாக்கி எதிர்கால தலைமுறையைப் பாதித்துவிடும்..!!

தேகி





Designed and maintained by: AKR Consultants