We have been making a sincere effort towards the tasks of working for the improvement of Children and spreading the usage of Tamil through mazhalaigal.com and have reached a great distance in the progressive path. As it is our bounden duty to work for the betterment of our Nation and the People of India all of us should join together with our friend Thamizthenee in an effort to bring about an awareness in our people on the necessary changes that have to be brought about for ensuring a better future to the country.
In this regard, discussing with Thamizthenee I have prepared the following introductory letter to be posted in various groups inviting everyone to join the peopleofindia google group and contribute their thoughts in this regard. I welcome suggestions from all viewers on this subject and request to post this message in the groups to which they belong.
Let us work together and try to make a better India.
அன்பு நண்பர்களே,
இந்த ரீதியில் இந்தியா வல்லரசாகின்றதோ இல்லையோ, ஆனால் நல்லரசாகத் தேவையான மாற்றங்கள் எவை என சிறிது சிந்திப்போம்.
1) நீதிமன்றங்களில் வருடக்கணக்காகத் தேங்கிக்கிடக்கும் தீர்வு காணாத வழக்குகளால் அல்லலுற்று மக்கள் அனேகர் தாம் வழக்குப் பதிவு செய்த பின்னரும், மரணம் அடையும் வரை தீர்ப்பு கிடைக்காமல் அநீதியால் மடியும் நிலை மாறி, பதிவு செய்யும் வழக்குகள் குறித்த கால வரையரைக்குள் தீர்க்கப் படும் நிலை உருவாக வேண்டும். இம்மாற்றம் ஏற்பட நீதிமன்றங்களில் பல வருடங்களாகக் காலியாகவே இருக்கும் நீதிபதி பதவிகளுக்குத் தகுதியுள்ளவர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்நியமனத்தில் சாதி சமய வேறுபாடுகள் பாராட்டாமல் தகுதியுள்ளவர்கள் யாராயினும் அவர்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு அனைவருக்கும் சம நீதி கிடைத்திட வழிகோல வேண்டும். நீதிபதிகளின் நியமனம், சம்பளம் மற்றும் பதவி மாற்ற விவகாரங்களில் மத்திய அரசோ, மாநில அரசுகளோ தலையிடுவதைத் தவிர்க்கும் வண்ணம் நீதித் துறை உச்ச நீதிமன்றம் மற்றும் ஜனாதிபதின் நேரடி அதிகாரத்தின் கீழ் வர வேண்டும். இதற்கான நிதி ஒதுக்கீடுகளையும்
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குழுவும் ஜனாதிபதியுமே செய்யும் அதிகாரம் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். நீதிமன்றங்களின் எண்ணிக்கை போதுமான அளவில் நாட்டின் பல்வேறு பதிகளில் இல்லாமையால் வழக்குப் பதிவு செய்பவர்கள் நீண்ட தூரப் பயணம் மேற்கொண்டு வெளியூர்களில் தங்கி, தீராத பிரச்சினைகளைத் தீர்க்க சேராத இடம் சேர்ந்த கதையாக வழக்குகளை மேற்கொண்டு வருந்தி மடியும் நிலையைத் தவிர்க்க நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நீதிமன்றங்களின் கிளைகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் உடனுக்குடன் கவனிக்கப்படும் நிலை உருவாக வேண்டும்.
2) நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் முறையான, அனைத்து விவரங்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு அவற்றை ரயில் பயணம் உட்பட எங்கு சென்றாலும், எந்நேரமும் தகுந்த அதிகாரிகளைக் கொண்டு சோதித்து அடையாளம் காணும் நிலை உருவாகி, முகம் தெரியாத தீவிரவாதிகளால் முக்கிய நகரங்களிலும் நாட்டின் பிற பல இடங்களிலும்ம் எதிர்பாராத விதமாக ஏற்படும் குண்டு வெடிப்புகளும் வெறித் தாக்குதலும் தவிர்க்கப்படும் நிலை உருவாக வேண்டும். இப்பணியில் அரசு அதிகாரிகளை மட்டும் சார்ந்திராமல் அரசு சார்பற்ற பொது சேவை நிறுவனங்களும் ஈடுபடுமாறு வழிவகுத்தால் பணி முழுமையாக நிறைவேறுவதில் தடையேதும் இராது. ஏற்கெனவே கொடுத்த அடையாள அட்டைகளுள் பலவற்றில் ஏற்பட்ட அடிப்படை விவர முரண்பாடுகள் அகலும். மக்கள் தொகை, வருமான வரி, தொழில் வரி, விற்பனை வரி போன்றவற்றை அனைவரிடமிருந்தும் முறைப்படி வசூல் செய்து கருப்புப் பணம் இல்லாத நிலை உருவாக இது வழிவகுக்கும்.
3) ஊராட்சி அலுவலகங்கள் முதல் தலைமைச் செயலகம் வரையிலான அரசு அலுவலகங்கள் அனைத்தும் இணைய வழியாக இணைக்கப்பட்டு, பிறப்பிலிருந்து இறப்பு வரை நாட்டிலுள்ள ஒவ்வொரு நபரைப்பற்றியும், வீடுகள், அவற்றின் உரிமையாளர்கள், வாடகைக்குக் குடியிருப்போர் முதலான விவரங்கள் அனைத்தும் அனைவரும் அறிந்து, வரி ஏய்ப்பை நீக்கவும், சமூக விரோதிகள் ஒளிந்து மறைவதைத் தடுக்கவும் வழிவகுக்க வேண்டும். சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்கள், வரம்புக்கு மீறிக் கட்டுப்பட்ட அடுக்கு மாடிகள் முதலியவற்றை விரைவில் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும்.
4) வரி வசூல்களை முறையாகச் செய்து சாலை அமைத்தல், குடிநீர் வசதி செய்தல் போன்ற அத்தியாவசியத் தெவைகளுக்குக் கூட அந்நிய நாடுகளிடமிருந்தும் உலக வங்கியிடமிருந்தும் கடன் வாங்கும் நிலையைத் தவிர்த்து நாட்டின் பொருளாதாரம் சீராக்கப்பட வேண்டும். நம் நாட்டில் துவங்கப்படும் தொழில்களில் நம் நாட்டவர் அதிக முதலீடு செய்யத் தக்க வழிமுறைகள் செய்து பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தொழில்களை நடத்தினால் தான் நம் நாட்டிலுள்ளோருக்கு உத்தியோகம் கிடைக்கும் என்ற நிலை மாறி, இந்தியா தன்னிறைவு அடைய வழிகோல வேண்டும். அரசுத்துறை நிறுவனங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பதைத் தடுக்க வேண்டும். நம் நாட்டில் உள்ள கல்வியறிவுள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெற்று, ஆராய்ச்சிகள் முதலான முன்னேற்றச் செயல்களை மேற்கொள்ள நம் நாட்டிலேயே
உரிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
5) சாதி மத வேறுபாடுகளைக் களைய கலப்புத் திருமணம் ஒன்றே சரியான வழியென்று பொய்யான பிரசாரங்களைச் செய்து சாதிச் சண்டைகள் என்றுமே தீராமல் ஆக்கி "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" எனும் பழமொழிக்கேற்ப ஊரைச் சுரண்டும் ஊழல் பேர்வழிகளின் சதிகள் முறியடிக்கப்பட்டு சாதிச் சண்டைகள் நீங்க வழிவகுக்க வேண்டும். "ஆயிரம் உண்டிங்கு சாதி, அதில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி" எனும் கருத்து ஆங்கிலேயருக்கு மட்டுமல்ல, தற்கால அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். சாதி, மதம் என்பது நாட்டு மக்கள் பரம்பரை பரம்பரையாக, வாழ்ந்து வரும் இடம், சூழிநிலை போன்றவற்றை மையமாக வைத்து உருவாகி நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழக்கம். இதில் அரசு தலையிடக் கூடாது. சாதிகளின் பெயரால் அரசு வேலைவாய்ப்புக்கு சலுகைகள் வழங்குகிறோம் என்று ஒரு புறம்
பிரச்சாரம் செய்துவிட்டு மறுபுறம் அரசுப் பணிகளில் ஆட்குறைப்பு செய்யும் ஏமாற்று வேலைகளை அறவே தடுத்து நிறுத்தி, சாதி, மதம் முதலானவற்றைப் பாராமல் நாட்டிலுள்ள அனைவருக்கும் நிச்சயமான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப் பட்டு, திறமை மிக்கவருக்கு அதிக ஊதியம், திறமை குறைந்தவருக்கும் குறைவற்ற ஊதியம் வழங்கும் வழி கண்டு, அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கல்வி, மருத்துவ சேவை உள்ளிட்ட வாழ்க்கைக்கு இன்றியமையாத அனைத்து வசதிகளையும் அனைவரும் பெறும் நிலை உருவாக வேண்டும்.
6) இரசாயனத் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள், பால் பதனிடும் நிலையங்கள், மீன், மாமிசம் மற்றும் பிற உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், தோல் பதனிடும் ஆலைகள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப் படாமல் சாக்கடைகளின் வழியே ஆறுகளிலும் கடலிலும் நேரடியாகக் கலந்து நீர்வாழ் உயிரினங்களை அழிப்பதுடன் குடிநீர்த் தட்டுப்பாட்டையும் உருவாக்கி, குடிநீரை நாட்டு மக்கள் அனைவரும் விலை கொடுத்து வாங்கிப் பருகும் கட்டாய நிலைக்கு நாட்டைத் தள்ளிய ஊழல் நீங்க வேண்டும். ஆற்று மணலை லாரிகள் மூலம் கட்டுப்பாடேதுமின்றி, வரியும் செலுத்தாமல் கொள்ளையடித்து, நிலத்தடி நீர்மட்டம் குறைய ஏதுவாகி, பூமியையே வரட்சிக்காடாக மாற்றும் முறைகேடான செயலைச் செய்பவர்கள் அகற்றப்பட்டு, ஆறுகள் உள்ளிட்ட நாட்டின் இயற்கை வளங்கள் சீர்கெடாமல் பாதுகாக்கப் பட வேண்டும். பல்வேறு ஆலைகளிலிருந்தும், வாகனங்களிலிருந்தும், குளிர்பதன சாதனங்களிலிருந்தும் வெளியாகும் அமிலத்தன்மை கொண்ட வாயுக்கள் வான மண்டலத்தைச் சூழ்ந்து, சூரியனின் புற ஊதாக்கதிர்களிடமிருந்து உலகைக் காக்கும் ஓசோன் படலம் அழிந்துவரும் நிலையைத் தடுத்து, உலகம்
உய்ய வழிகோல வேண்டும். இயற்கையாக பூமியில் வளரும் மரங்களை வரைமுறையில்லாமல் அழித்து சாலைகள் அமைப்பதும், கட்டடங்கள் கட்டுவதும் போன்ற செயல்களைத் தடுத்து நிறுத்தி மரங்களை மேலும் பல இடங்களில் வளர்த்து உலகம் செழிப்படையச் செய்ய வேண்டும். காடுகளை முறைகேடாக அழித்து இயற்கைச் செல்வங்களைச் சூரையாடும் கொள்ளை நிற்க வேண்டும்.
இன்னும் இவைபோல் எண்ணிறந்த பிரச்சினைகள் பூதாகரமாக உருவெடுத்து வளர்ந்து நாட்டையும் உலகையும் அழிக்கும் நிலை வந்துள்ளது என்பதை சற்றேனும் பொது அறிவும் சிந்தனைத் திறனும் உள்ள யாரும் மறுக்க மாட்டார்கள். இந்த சிக்கல்களிலிருந்து நாட்டைக் காக்கும் சீர்திருத்தப் பணியில் நாம் செய்யத் தக்கது என்ன? வியாபார நோக்கத்தில் தயாரிக்கப்படும் சில திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல சமூகவிரோதிகளுடன் பல விதத்தில் சண்டையிட்டு, நீதி நிலைபெறச் செய்து, நாட்டில் நல்லாட்சியை உருவாக்கி, அந்நிய பயங்கரவாத சக்திகளிடமிருந்து நாட்டைக் காத்துவிட்டது போன்ற ஒரு பிரமையை உருவாக்கி மகிழ்வதால் நாடு நலம் பெற்றுவிடாது.
நாட்டிலுள்ள அனைத்து மக்களும் நாட்டின் நிலைமையை நன்கறிந்து உண்மையாகவே நல்லாட்சி தரவல்ல வேட்பாளர்களை மட்டும் தேர்வு செய்து ஊழல் பேர்வழிகளை அரசியல் பாதையிலிருந்து விரட்ட தங்களது ஓட்டுரிமை எனும் ஆயுதத்தை முறையான வகையில் பயன்படுத்த வேண்டும்.
இத்தகைய நிலை வர நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ தமது சுயலாபத்தைப் பெருக்கும் நோக்கில் அரசுகள் கல்வியைத் தனியார் மயமக்கியதால் கல்வி கற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இன்றைய குழந்தைகள் அறிவிற் சிறந்த இளைஞர்களாகவும் இன்றைய இளைஞர்கள் தேர்ந்த அறிவுள்ள தலைவர்களாகவும் வரும் வாய்ப்பு ப்ரகாசமாக உள்ளது. இந்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகளை தொடர்ந்து விவாதித்து அனைவரும் அத்தகைய விவாதங்களின் விவரத்தைக் காணும் வழியை, கணிணி மற்றும் இணைய வசதிகள் இணையதளங்கள் மூலமும் பல்வேறு இணையக் குழுமங்கள் மூலமும் அமைத்துள்ளது. இவ்வழியை நன்கு பயன்படுத்தி, நாட்டுக்கு நம்மாலான
சேவையைச் செய்ய முன்வருமாறு அனைவரையும் அழைக்கிறோம்.
வாருங்கள், ஒன்றாய்க் கூடுங்கள், தங்கள் கருத்துக்களைத் கூறுங்கள், நாடு சுபிட்சம் பெற நல்லதொரு பாதையை அமைத்துத் தாருங்கள்.
JOIN PEOPLE OF INDIA GOOGLE GROUP
அபாயம்! அபாயம்!! அபாயம்!!!
உலகம் அழிவை நோக்கி வெகுவிரைவாகச் சென்றுகொண்டிருக்கிறது. இதன் காரணம் செயல்படாத சட்டங்கள், முறைகேடான ஆட்சிகள், சமூகச் சீர்கேடுகள், சுற்றுப்புறச் சூழலில் அழிவு முதலிய கேடுகள் மலிந்துவிட்டமையே. இத்தகைய சீர்கேட்டினைத் தடுத்து வருங்கால சந்ததிகள் உலகில் நலமாக வாழ வழிசெய்யப் பாடுபடுவது நம் அனைவரது இன்றியமையாத கடமையாகும்.


