-
ராஜா... ராஜா...
ராஜா... ராஜா...
ராஜாவுக் குண்டு கூஜா... கூஜா...
கூஜா போட்ட கோஷத்துல
வானத்துலெ பறந்தே தான்
போனாரு ராஜா...ராஜா...
ராஜா ஏறினாரு பல்லாக்கு
பாத்தவ னெல்லாம் போட்டான் சலாமு
வந்தாரொரு கணக்குப் புள்ளெ
சொன்னா ரவரு சேதி ஒண்ணு
ராசா ... ராசா... காலியகுது கஜானா
சாக்கிறதெ தேவெ யிப்போ
அதெக் கேட்ட ஊரு சனம்
சத்தந் தான் போட்டாங்க
சத்தங் கேட்டே திடீலுன்னு
தரெலெ உளுந்த ராசா சொன்னாரு
ஒட்டலெ பாரு
என் மீசெலெ மண்ணு
சூரியனெப் பாத்து நாய் கொலெச்சா
வாயி வலிக்கும் நாய்க்குத் தான்னே
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
