-
குடும்ப விளக்கு நாங்கள்!
ராமாயண சீதை சிறையெடுக்கப்பட்டாள்
பாரதப் பாஞ்சாலி துகிலுரிக்கப்பட்டடாள்
சிலப்பதிகாரக் கண்ணகி விதவையாக்கப்பட்டாள்
பெண்களே! சிறைடியடுத்து துகிலுரித்து
விதைவையாக்கியதால் நீங்கள்
தெய்வப் பிறவிகளானீர்கள் ஆனால்
இக்காலப் பெண்களாகிய எங்களுக்கு
வேண்டாம் தெய்வப் பிறவி
தீண்டோம் தெய்வப் பதவி
பாரதி கனவு கண்ட
புதுமைப் பிறவிகளாக வாழவே விருப்பம்
பாரதப் பாஞ்சாலி துகிலுரிக்கப்பட்டடாள்
சிலப்பதிகாரக் கண்ணகி விதவையாக்கப்பட்டாள்
பெண்களே! சிறைடியடுத்து துகிலுரித்து
விதைவையாக்கியதால் நீங்கள்
தெய்வப் பிறவிகளானீர்கள் ஆனால்
இக்காலப் பெண்களாகிய எங்களுக்கு
வேண்டாம் தெய்வப் பிறவி
தீண்டோம் தெய்வப் பதவி
பாரதி கனவு கண்ட
புதுமைப் பிறவிகளாக வாழவே விருப்பம்
கோவலன் உத்தமனாக இருந்திருந்தால்
உலகுக்கு ஒரு சிலப்பதிகாரம் கிடைத்திருக்காது
சகுனி நேர்மையாளனாக இருந்திருந்தால்
உலகுக்கு ஒரு மகாபாரதம் கிடைத்திருக்காது
கூனி கோள் சொல்லாமல் இருந்திருந்தால்
உலகுக்கு ஒரு ராமாயணம் கிடைத்திருக்காது
நாங்கள் தெய்வப்பிறவிகளாக ஊமைப்
பதுமைகளாக இருந்தால்
பாரதியின் கனவு பலித்திருக்காது.
பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்கள்
நாங்கள் பாரத நாட்டின் வீரப்பெண்கள்
நாங்கள் பகையை முறியடித்து
வகையாக வாழ்க்கையினை வாழ்ந்து
திக்குகள் எட்டும் சுற்றி வந்து
பற்றிக் கொள்வோம் வெற்றிக் கனியை,
இதனால் பாரதிதாசன் சொன்ன
குடும்ப விளக்கும் நாங்களே!
உஷா முத்துராமன், மதுரை
