திரு விளக்கு
கார்மேகம் சூழ்ந்து மாரி பெய்தஐப்பசி மாதமும் தான் முடிந்து
சீர் மேகமாய் வானும் தெள்ளத் தெளிவாக
முழு மதி வானிலே தோன்றிடும் வேளையிலே
கார்த்திகை மாத வரவேற்பு
கையிலே தீபமேந்தி மெய்யிலே பட்டுடுத்தி
ஞான விளகேற்றும் மோன தேவதைகள்
தீப விளக்கேற்றி ஆங்காங்கே வைக்கின்றார்
கிழக்கு நோக்கி,
திருவண்ணமலையிலே பெருந்தீபம்
ஜோதியாத் தான் தெரிய சூரியனும்
பூமியிலே தானிறங்கி ஒளிர்கிறானோ
என்றெண்ணித் திகைக்கின்றார் தேவருமே
பூமியிலே நக்ஷத்திரங்கள் தாம் இறங்கி
பூப் பூவாய் ஒளிர்கிறதோ என்றெண்ணி
வான் வெளியிலே அதிசயிக்கின்றார்
முப்பத்து முக்கோடி தேவருமே!
நம் குலப் பெண்டிர் ஏற்றுகின்ற தீபமெலாம்
குலம் காக்க வேண்டித்தானே
குலவிளக்காய் வந்த அவர் குளித்து
புத்தம் புது மலராய் புத்தாடை தாமணிந்து
திரு விளக்கை ஏற்றுதல் நலமேயாம்
தேவர்களும் மகிழ்ந்தே ஆசீர்வாதங்களை
கார் முகிலின் தூரல்களாய்த் தூதனுப்பி மகிழ்வாரே
கார்த்திகைப் பெருநாளில்
அன்புடன்
தமிழ்த்தேனீ


