-
தினம் ஒரு சிந்தனை
முட்டுச் சந்து
பலமுறை புதிதாகச் செல்லும் இடங்களில் நான் என் வாகனத்தை ஒரு குத்துமதிப்பாக ஓட்டிக்கொண்டு செல்லும்போது அங்கே எதிர்பாராமல் ஒரு முட்டுச் சந்து வரும். வேறு வழியில்லாமல் மீண்டும் பின் பக்கமாகச் சென்று சுற்றி வந்தால் அது நாம் முன்பு இருந்த பழைய சாலையிலேயே கொண்டுபோய் விடும். இதனால் நேரமும், பணமும் விரையமாகிறது.
இப்படித்தான் நாம் எடுக்கும் முயற்சிகளில் பல முட்டுக்கட்டைகள் தோன்றுகின்றன. இதற்கு முக்கியக் காரணம் ஏற்கெனவே அனுபவப்பட்டவரை நாம் மதிக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்படுதலே ஆகும்.
ஆகவே, நாம் முன் யோசனையுடன் அனுபவசாலிகளைக் கேட்டு அதன் படி நடக்க ஆரம்பித்தால் ஓரளவு இது போன்ற முட்டுச் சந்துகளையும், முட்டுக்கட்டைகளையும் தவிர்க்கலாம் என்றே உணர்கிறேன்.
அனுபவங்களை மதிப்போம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ

