-
தினம் ஒரு சிந்தனை - நிதானம்
பல மனிதர்களை நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம். அவர்களுடன் பலவிதமான உரையாடல்களை செய்கிறோம். நாம் சொல்லும்போது, ஆஹா நன்றாகப் புரிந்துவிட்டது என்று சொல்பவர்களையெல்லாம் அப்படியே நாம் நம்புகிறோம். ஆனால் மீண்டும் அவர்கள் சற்றும் மாற்றம் இல்லாமல் அப்படியே பழைய மாதிரியே நடக்கும்போது நாம் வருத்தப்படுகிறோம்.
ஒரு சில விஷயங்கள் நாம் புரிந்துகொள்ளும் முறையில் கூடத் தவறு இருக்கிறது. அவர்கள் புரிந்துகொண்ட விதம் எப்படி என்று நமக்குப் பூரணமாகப் புரிந்துகொள்ள இயலவில்லை என்றுதான் பொருள். ஆகவே நாம் சொல்லும்போது தெளிவாகச் சொல்ல வேண்டும். அவர்கள் புரிந்துகொண்டார்களா என்று நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவரை நான், "என்ன சௌக்கியமா?" என்றேன் விசாரிக்கும் முறையில், ஆனால் அவர் ஏதோ ப்ரச்சனையில் இருந்தார் போலும், "என்ன கிண்டல் பண்றியா?" என்றார்.
இதில் யோசித்துப் பார்த்தால் என் மேலும் தவறில்லை, அவர் மேலும் தவறில்லை.
ஆகவே, நாம் என்ன நோக்கில் பேசுகிறோம் என்று புரிந்து கொள்பவர்களிடம் பேசுவோம். தவறாக எடுத்துக் கொள்பவர்களுக்குப் புரிய வைப்போம்.
மிக இதமாக, நிதானமாகப் ப்ரச்சனைகளை அலசக் கற்ப்போம்.
தானங்களில் சிறந்தது நிதானம். அது இறைவனின் சன்னிதானம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
