-
தினம் ஒரு சிந்தனை
இனி ஒரு விதி செய்வோம்
சில விதிகள் எல்லோருக்கும் பொதுவாக உபயோகப்படுவதில்லை/
தன் நிழலைப் பார்த்தால் இளைத்து விடுவாய் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
1. இளைப்பதற்காகp பல நாட்களாகth தன் நிழலையே பார்த்துக் கொண்டிருப்பவர் இளைப்பதில்லை.
2. தேன் தலையில் உள்ள முடியில் பட்டால் முடி வெளுத்து விடும் என்பர். முழுவதும் தேன் தடவியும் முடி வெளுக்கவில்லை, எரும்பு கடித்ததுதான் மிச்சம்
அது போல் ஹரியை அடைய ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒவ்வொரு யுக்தி வேண்டும். அந்த ஆத்மாவுக்கு ஏற்றபடி யாருக்கு ஜுரம் வந்தாலும் அவரவர் உடல் நிலைக்கு, வயதுக்குth தகுந்தாற் போல மாத்திரையில் அடங்கியுள்ள மருத்துவப் பொருட்களின் அளவுகளைக் குறைத்தோ கூட்டியோ கொடுப்பவர்தான் மருத்துவர். அப்படி இல்லாவிடின் மருத்துவரே தேவையில்லையே. நாமே பொதுவான ஒரு மருந்தை உட்கொள்ளலாமே. தகுந்த மருத்துவரும், தகுந்த மருத்துவமும் போலத்தான் ஞானம் பெறுதலும் தருதலும்.
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது.
அன்புடன்
தமிழ்த்தேனீ
