-
தினம் ஒரு சிந்தனை
குழந்தைகளை ஊக்குவிப்போம்
என் பேரன் ஹரிப்ரசாத் அவனுடைய பள்ளியில் நடந்த ஒரு கேள்வி பதில் பகுதிக்காக நம் நாட்டை முன்னேற்ற என்ன செய்ய வேண்டும் என்னும் கேள்விக்கு கீழே உள்ளவற்றை எழுதியிருக்கிறான்.
1. உலக சுற்றுச் சூழலை மாசுபடுத்தாமல் உலகம் வெப்பமயமாவதைத் தடுக்க வேண்டும்,
2. தரமான கல்வி அளிக்க வேண்டும்,
3. தங்கம் போன்ற உலோகங்களுக்காக பூமியைத் தோண்டாமல் இருக்க வேண்டும்,
4. யாரிடமும் சண்டை போடாமல் இருக்க வேண்டும்,
5. தரக் குறைவான சொற்களைப் பேசாமல் இருக்க வேண்டும்,
6. நாம் அமைதியான மன நிலையில் இருக்க வேண்டும்,
7. நாம் மரங்களை, இயற்கையை அழிக்கக் கூடாது,
அப்படி அழித்தால், மழைபெய்யாது,காற்று கிடைக்காது என்று எழுதி இருக்கிறான்,
மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது,
இப்படி அனைத்து சிறுவர்களையும் அழைத்து, அவர்களுக்கு ஒரு கேள்வியைக் கொடுத்து விட்டு அதற்கு பதில் எழுதச் சொன்னாலே, நிறைய செய்திகளை நாம் கற்றுக்கொள்ள முடியும் என்று தோன்றுகிறது.
குழந்தைகளை ஊக்குவிப்போம், நாமும் கற்றுக் கொள்வோம், குழந்தையும் தெய்வமும் ஒன்று, என்று சொல்வார்கள் நாம் கற்றுக்கொள்ள அவர்களிடம் அனேக நல்ல செய்திகள் இருக்கின்றன, இப்படி நாம் அவர்களை மதித்தால், அவர்களும் அனைவரையும் மதிக்க கற்றுக்கொள்வர்.
பண்புகள் கற்றுக் கொடுப்போம், கற்றுக் கொள்வோம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
