-
தினம் ஒரு சிந்தனை
விழித்துக்கொள்ளுங்கள்
சேரிகளில் வாழும் பலர் வீட்டில் இல்லாத நவீன விஞ்ஞானக் கருவிகளே இல்லை. பல சேரிகளில் குடிசைகளில் வாழ்வோர் அந்த இடத்துக்கே சொந்தக்காரர்களல்ல. அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்தோடு அரசாங்க நிலங்களை ஆக்ரமிப்பு செய்துகொண்டு அத்துணை குற்றங்களுக்கும் துணைபோவோர் ஏராளம். இதற்கு நடுவே உண்மையான ஏழைகளும் அங்கு இவர்களைப் போன்ற அநியாயக் காரர்களுக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே. இந்தியா ஏழை நாடல்ல. ஒரு சில அக்ரமக்காரர்களின் அந்தரங்க இரும்புப் பெட்டியிலே உபயோகமே இல்லாமல் பயன்படாமல் பதுங்கி இருக்கும் பணத்தில் ஒரு சதவிகிதம் வெளிவந்தாலே இந்தியா சொர்கபுரியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு முறை மத்திய அமைச்சர் திரு பாய் அவர்கள் கூறினார்கள்.
"வருமானத் துறையில் வேலை செய்வோருக்கு அளிக்கப்படும் ஊதியம் அனைத்தையும் திரட்டி அதில் பாதியை செலவழித்தாலே இந்தியாவெங்கும் தரமான சாலைகளை அமைத்துவிடலாம். இந்தியாவை நன்கு மேம்படுத்திவிடலாம்" என்று.
ஆகவே மக்கள் அக்ரமக்காரர்களை இனங்கண்டு அவர்களை எதிர்க்க ஆரம்பித்தாலே நாடு வளமாகிவிடும்.
மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் அவ்வளவே.
அன்புடன்
தமிழ்த்தேனீ
