-
தினம் ஒரு சிந்தனை
புத்திசாலித்தனம்
அமெரிக்காவின் ஒரு ப்ரதான வங்கியில் சென்று ஒருவர் தான் அவசரமாக இந்தியாவுக்கு செல்ல வேண்டியிருப்பதால் தனக்கு 5000 டாலர்கள் கடனாக வேண்டும் என்று கேட்டாராம்.
அதற்கு அந்த வங்கி அவர் ஏதேனும் ஒரு விலைமதிப்புள்ள பொருளை வங்கியில் அளித்தால் அதை வைத்துக்கொண்டு பணம் தருவதாக் சொல்லவே அவர் தன்னுடைய விலமதிப்பான ஃபெராரி காரை அந்த வங்கியில் ஒப்படைத்துவிட்டு 5000 டாலர்கள் வாங்கிக்கொண்டு இந்தியா சென்று விட்டார்.
அமெரிக்க வங்கியில் இருப்போர் இப்படிக்கூட ஒரு முட்டாள் இருப்பானா வெறும் 5000 டாலருக்கு இவ்வளவு மதிப்பு பெறும் காரை எவனாவது வங்கியில் வைப்பானா என்று கேலிபேசிக்கொண்டிருந்தனர்.
இந்தியா சென்று இரு வாரங்களுக்கு பிறகு அமெரிக்கா திரும்பிய இந்தியர் வங்கிக்கு சென்று 5000 டாலரைத் திருப்பி அளித்தார். அதற்குண்டான வட்டித் தொகையான 15.41 டாலரையும் கட்டிவிட்டு காரை எடுத்தார்.
அப்போது அந்த வங்கி அலுவலர் நீங்கள் ஒரு பெரிய பணக்காரர் என்று எங்களுக்கு தெரியும், ஆனால் 5000 டாலருக்காக இவ்வளவு விலை உயர்ந்த காரை ஏன் அடமானம் வைத்தீர்கள் என்று கேட்க, அமெரிக்காவில் இரு வாரங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக விலைஉயர்ந்த ஃபெராரி காரை அதுவும் வெறும் 15.41 டாலருக்கு வேறெங்கும் நிறுத்த முடியாது, அதனால்தான் என்றாராம்.
வங்கி அலுவலர் அதிர்ந்து போனாராம் இந்தியரின் புத்திசாலித்தனத்தை வியந்தபடி!
நன்றி (funandfunonly)
அன்புடன்
தமிழ்த்தேனீ
