-
தினம் ஒரு சிந்தனை
நாள் என்ன செய்யும்
வழக்கம் போல் காலையில் எழுந்து பல் தேய்த்துவிட்டு காலை தினசரியைப் பிரித்து இன்று நாள் எப்படி இருக்கும் என்று படிக்க ஆரம்பித்தேன்.
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, இன்று நீங்கள் நினைத்த காரியம் சுலபமாக முடியும், நீங்களே எதிர்பாராத அதிர்ஷ்டம் வீடு தேடி வந்து கதவைத் தட்டும் நாள் என்று எழுதியிருந்தார்கள்.
ஆமாம், தினசரியில் இவர்கள் எழுதும் ஜ்யோதிடப் பகுதி பக்கங்களை நிரப்பவா, அல்லது நம்மை ஊக்குவிக்கவா? யோசித்துப் பார்த்தால் பக்கங்களை நிரப்பவே என்று தோன்றுகிறது.
”நாள் என் செயும் பிறந்த கோள் என் செயும்?”
பலனை எதிர் பாராமல் கடமைகளை ஒழுங்காக செய்தால்அல்லவோ பலன் கிடைக்கும்.
நாம் நம் மனதை சுத்தமாக நல்ல எண்ணங்களுடன் வைத்துக்கொண்டு நம்முடைய கடமைகளை மறக்காமல் ஒழுங்காக செய்வோமானால் நல்ல பலன் நிச்சயம், அதை விடுத்து நம்மை நம்பாமல் பொதுவாக ஏனோதானோ என்று எழுதும் ஜ்யோதிடங்களை நம்பலாமா?
அன்புடன்
தமிழ்த்தேனீ
