-
தினம் ஒரு சிந்தனை
அறிவு விழிப்புணர்வு
சிந்தனை:
தினமும் நாம் புலன்களின் உறக்கத்திலிருந்து விழிக்கிறோம்!
ஆனால் நாம் அறிவு உறக்கத்திலிருந்து விழிக்கிறோமா என்பதே இன்றைய சிந்தனை. ஆமாம், புலன்களின் விழிப்பை விட அறிவு விழிப்புணர்வு மிக முக்கியம். அன்றாடம் பலவிதமான புதிய அனுபவங்களை அடைகிறோம் என்பது பெருமையல்ல. அந்த அனுபவங்களின் வாயிலாக நாம் அறிவு விழிப்புணர்வு அடைகிறோமா என்பதே முக்கியமாக நாம் உணர வேண்டும்.
”ஆன்றோர் செரித்த அறு சுவையின்
வெளிப்பாடே இங்கே நமக்கு அகப்பாடு,
எங்கே அறிவு வெளிப்படினும்
அதுவே நமக்கு முதல் ஈடு”
அன்புடன்
தமிழ்த்தேனீ
