People of India இந்திய மக்கள்  

The people of India
இந்திய மக்கள்

ஆசிரியர்: தமிழ்த்தேனீ
Jai Jawan Jai kisan   Be proud to be an Indian
India is rich in it's culture and heritage with various arts, religion and languages. India has given birth to great leaders history will ever remember. Let us work together to bring prosperity to Mother India overcoming all hurdles whatever be the cause.

Custom Search
 |  Home  |  Arts  |  Literature  |  Stories  |  Poems  |  Articles  |  Politics  |  NEWS  |  Feedback  | 

Editorial
WELCOME Page
Editorial Page
Editor's Messages
Thoughts of Editor


Side Links
Services
Daily Quotes
Video News
All Video


Favorites

Achalam.com
Mazhalaigal.com
Kalakad.org
Healthcareall.org
Brahmin Today.org
Thamizhisai.com
Young Poet.org
RCC pipes.com
CIT76.com
Azhagi.com

contact@peopleofindia.net or peopleofindia.net@gmail.com   பாரத சமுதாயம் வாழ்கவே










INDEPENDENCE DAY MESSAGE FOR THE CHILDREN

அன்புக் குழந்தைகளே,

இன்று இந்தியா சுதந்திரம் அடைந்த நாள்!

ஆகஸ்ட் பதினைந்து, பள்ளிகளுக்கு, பணி புரிவோருக்கு, அனைவருக்கும் விடுமுறை, மிக சந்தோஷமாகக் கழிக்க வேண்டிய நாள். காலை எழுந்து குளித்துவிட்டு நம் நாட்டின் தேசியக் கொடியை உயரப் பறக்கவிட்டு, அதன் கீழே ஆனந்தமாய் நின்று கொண்டு,

”ஆடுவோமே பள்ளு பாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று”

பாட்டுப் பாடி, நம் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திவிட்டு, பெற்ற சுதந்திரத்தைக் கொண்டாடி மகிழ அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறோம். இந்த சுதந்திரத்தை நமக்குப் பெற்றுத்தரப் பாடு பட்ட பல தியாகிகள் மஹாத்மா காந்தி, மஹாகவி பாரதியார், கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார், ராஜாஜி, நேதாஜி, சர்தார் வல்லபாய் படேல், வாஞ்சிநாதன், கொடிகாத்த குமரன், இன்னும் எத்தனையோ பெரியவர்கள் நமக்காகப் பாடுபட்டு சுதந்திரமளித்த அவர்களுக்கெல்லாம் மரியாதை செய்யும் வண்ணமாக இந்த சுதந்திர தினத்தை நிச்சயமாகக் கொண்டாட வேண்டும்.

ஒன்று யோசிக்கலாமே!

அவர்கள் பாடுபட்டு வாங்கித்தந்த சுதந்திரத்தை அனுபவிக்கிறோமே, நாம் நாட்டுக்காக என்ன செய்தோம் என்று நினைத்துப் பார்த்து, நம் நாட்டுக்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை யோசித்து, நம் பங்காக நாமும் நம் நாட்டுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டு, அதற்காக ஏதேனும் முயற்சிகள் எடுக்கலாமே, ஹும் என்ன செய்யலாம்.?

நாம் நன்றாகப் படித்து, முன்னுக்கு வந்து ஊழல், லஞ்சம் வாங்குதல், போன்ற தீய சக்திகளை அழித்து நம் நாட்டைக் காப்பாற்ற உறுதி எடுத்துக்கொள்ளலாமே. செய்வோமா? அப்போதான் நாம நம் நாட்டிலுள்ள அனைவருக்கும் இனிப்பு அளித்த மகிழ்ச்சி நமக்குக் கிடைக்கும்,

சொல்லுங்க:

வந்தே மாதரம்! வாழ்க சுதந்திரம! வந்து மாத்தறோம் நாட்டை நல்ல முன்னேற்றப் பாதைக்கு, நாங்கள் வளர்ந்து வந்து மாத்தறோம்.

அப்பிடித்தான், இப்போ நாம கொடி ஏத்தலாமா, எல்லாரும் நம்ம நாட்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துங்கள், அப்பிடித்தான்.

இப்போ நாம் எல்லாருக்கும் இனிப்பு வழங்கலாம், மீண்டும் நாளை சந்திக்கலாமா?

அன்புடன்
தமிழ்த்தேனீ



Your Feedback - உங்கள் பின்னூட்டம்



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




 

Designed and maintained by: AKR Consultants