-
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பிறந்து பத்தாண்டு ஆனது முதல் புத்தாண்டு வாழ்த்து சொல்லக் கற்றுக் கொடுத்தவர் பெற்றோர், முன்னோர் வகுத்த வழி சித்திரை மாத முதல் நாள் வருடப் பிறப்பு வழி வழியாய் வந்த வகை மாற்ற முடியவில்லை. மாற்றங்கள் தேவைதான் மாற்றங்களை ஏற்கும் மனம் நிச்சயமாய் வேண்டும் தான், ஆனாலும் மாற்ற முடியாதவை பல.பெற்றதாயை, பெற்ற தகப்பனை, பிறந்த பொன்னாட்டை, தாய் மொழியை மறக்கவும் கூடாது, மாற்றவும் முடியாது, மாற்றவும் கூடாது. அதேபோல முன்னோர்கள் கணித்த தீர்க்க தரிசனங்களை மாற்றவும் மனமில்லை. ஆகவே சித்திரையே தொடக்கமாக இவ்வாண்டில் இத்தரையும் செழிக்குமாக.
புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்வோடு பகிர்ந்து கொள்வோம்
இன்றே பிறந்ததது சித்திரைப் புத்தாண்டு
பிறக்கின்ற வருடத்துக்கு பெயர் விரோதி யாம்
நாட்டிலுள்ள வேண்டாத தீயவைக்கு விரோதியாய் இருக்கட்டும்
நன்மைகளைத் தடுப்போர்க்கு விரோதியாய் இருக்கட்டும்
நன்மை செய்வோர்க்கு நல்ல ஆண்டாய் அமையட்டும்.
நல்விளைவு தனை அளித்து தீவினைதனை தடுக்கும் நல் வருடப் பிறப்பாய் இவ்வருடம் இருக்கட்டும், எல்லா நலன்களையும், எல்லா வளங்களையும் வித்யாசமின்றி எல்லோருக்கும் அளிக்கும் புத்தாண்டாய் விரோதி வருடம் அமையட்டும் என்று வேண்டி புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
Your Feedback - உங்கள் பின்னூட்டம்
