People of India இந்திய மக்கள் 

The people of India
இந்திய மக்கள்

ஆசிரியர்: தமிழ்த்தேனீ
Jai Jawan Jai kisan       Be proud to be an Indian
India is rich in it's culture and heritage with various arts, religion and languages. India has given birth to great leaders history will ever remember. Let us work together to bring prosperity to Mother India overcoming all hurdles whatever be the cause.

Custom Search
 |  இல்லம்  |  கலைகள்  |  இலக்கியம்  |  கதைகள்  |  கவிதைகள்  |  கட்டுரைகள்  |  அரசியல்  |  செய்திகள்  |  பின்னூட்டம்  | 
HOME

சிந்தனை செய் மனமே!

Favorites

Achalam.com
Mazhalaigal.com
Kalakad.org
Healthcareall.org
Brahmin Today.org
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Young Poet.org
kavithai kuyil
ACOE.co.in
RCC pipes.com
CIT76.com
CIT India.com
KTVR.com
Nilacharal.com
Azhagi.com

Contact us at: contact@peopleofindia.net or peopleofindia.net@gmail.com         பாரத சமுதாயம் வாழ்கவே









அன்புள்ள சகோதர சகோதரிகளே,

மதம், மொழி, இனம், ஜாதி போன்ற அனைத்துப் பிரிவினை வாத சக்திகளுக்கும் அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒன்று கூடி நம் இந்திய நாட்டை மேம்படுத்த சில விழிப்புணர்வுகளைப் பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், அத்தகைய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விவாதங்கள், கட்டுரைகள், செய்திகள், கவிதைகள், கதைகள், புதினங்கள், ஓவியங்கள் முதலிய அனைத்தும் வரவேற்கப்படுகின்றன. யாரையும் புண்படுத்தாமல், பண்படுவோம், பண்படுத்துவோம்.

வேஷம் கலைத்து வாருங்கள்
வெகுளியாகப் பேசலாம்
ரோஷம் கலைத்து வாருங்கள்
வினயமாகப் பேசலாம்
கோபம் தவிர்த்து வாருங்கள்
ஆசையாகப் பேசலாம்
த்ரோகம் தவிர்த்து வாருங்கள்
பாசமாகப் பேசலாம்
மோகம் தவிர்த்து வாருங்கள்
காதலாகப் பேசலாம்
வன்மம் தவிர்த்து வாருங்கள்
அன்பாகப் பேசலாம்
பொய்மை தவிர்த்து வாருங்கள்
உண்மையாகப் பேசலாம்

People of India - இந்திய மக்கள் என்னும் இந்த இணையதளத்தை நமக்காக, நம் நன்மைக்காக, நம் சகோதர்கள் கொடுத்த ஊக்கத்தின் பேரில் ஆரம்பித்திருக்கிறேன்.

நாம் கீழே விழும் தருணத்தில் பக்கத்தில் இருந்து யார் நம்மைத் தூக்குகிறார்களோ அவர்கள் தானே உறவினர்கள் நம் பக்கத்தில் உள்ளவர்கள் வருத்தமாய் இருக்கும்போது நாம் மகிழ்ச்சியாய் இருந்தாலும் காட்டிக் கொள்ள முடியாது. ஆகவே அனைவரையும் மகிழ்ச்சியாய் வைத்து நாமும் மகிழ்ச்சியாய் இருப்போம். மக்கள் வளம் பெறட்டும், வாழ்வு சிறக்கட்டும், நன்மைகள் விளையட்டும், நாடு செழிக்கட்டும். மீண்டும் சுதந்திரம் என்னும் சிந்தை வளர்ப்போம். மனிதர்கள் தான் உலகில் முக்கியம்! மதமோ, ஜாதியோ, இனமோ, மொழியோ எல்லாமே மனிதர்கள் இருந்தால்தானே! மனிதர்கள் இல்லா உலகம் இருந்தும் பயனில்லை. ஆகவே மக்களை மாக்களாக்கும் மடமைகளைத் துரத்துவோம். மக்கள் சக்தியைப் பெருக்குவோம், மனிதம் வளரட்டும் மனித நேயம் மலரட்டும்.

இணையத்தில் பல தளங்கள் உள்ளன. நாமும் ஒரு தளம் அமைக்கிறோம், நம்முடைய தளம் அன்பு, பாசம், நேசம், மனிதாபிமானம் போன்ற அடிப்படைகளால் வலுவாக உருவாக்கப்பட்டு, மனிதம் வளர்க்கும் தளமாக அமைய வேண்டும் என்பது என்னுடைய ஆசை. பல மனிதர்களின் துன்பங்களைப் போக்கும் விதமாக அமையும், அமைக்க வேண்டும். நிச்சயமாய் இந்தத் தளம் அப்படி அமையும்.

கலைகள்: நம்முடைய நாட்டின் பாரம்பரியக் கலைகளை புதுப்பிக்கும் வகையில் இயல், இசை நாட்டியம், சிற்பக்கலைகள், ஓவியக்கலை, தேசீய விழிப்புணர்வு, சுற்றுச் சூழல், பற்றிய நாடகங்கள், குறும்படங்கள், அனைத்தும் அளிக்கலாம்.

இலக்கியம்: நம்முடைய புராதன, நவீன இலக்கியங்களின் ஆக்கம் கதைகள்; கவிதைகள், கட்டுரைகள், அரசியல், குறும்பு ஓவியங்கள்,செய்திகள் என அனைத்தும் எழுதலாம், முக்கியமாக அவரவர் தம் வீடுகளில் இருக்கும் பாசமிகு அங்கத்தினர்களின் திறமைகளை, சாதனைகளை எழுதி, கலைகளை வளர்க்கலாம்.

ஒரு அன்பான வேண்டுகோள்:

தயவு செய்து யாரையும் புண்படுத்தாமல் மனிதர்களுக்கு, மனதுக்கு இதமாக நன்மை பயக்கும் நல் விஷயங்களப்பற்றி எழுதுங்கள். பொதுவாக நம் நாட்டில் ஆங்காங்கே நடக்கும் பல விஷயங்களில் மக்களுக்குப் பாதகமான விஷயங்கள் நடைபெற்றால் அவைகளைப் பற்றி எழுதலாம். அது மட்டுமல்ல, ப்ரச்சனைகளை யார் வேண்டுமானலும் சொல்லலாம். அவைகளுக்குத் தீர்வுகள் சொல்வதற்கும் நாம் முயல்வோம், தீர்வுகள் சொல்வதற்கும் முன்வாருங்கள். தீர்வுகளுக்கு உதவ சக்தி உள்ளவர்கள் முன் வாருங்கள். முடிந்தவரை மக்களுக்கு உதவுவோம். நாட்டின் பல ப்ரச்சனைகளை விவாதிப்போம், நம்மால் முடிந்த அளவுக்கு அனைத்தையும் எளிதாக தீர்க்க முயலுவோம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை உலகில்.

“முயற்சி திருவினையாக்கும்” அன்புடன்
தமிழ்த்தேனீ
ஆசிரியர்
rkc1947@gmail.com
http://thamizthenee.blogspot.com/





Designed and maintained by: AKR Consultants