People of India இந்திய மக்கள் 

The people of India
இந்திய மக்கள்

ஆசிரியர்: தமிழ்த்தேனீ
Jai Jawan Jai kisan       Be proud to be an Indian
India is rich in it's culture and heritage with various arts, religion and languages. India has given birth to great leaders history will ever remember. Let us work together to bring prosperity to Mother India overcoming all hurdles whatever be the cause.

Custom Search
 |  இல்லம்  |  கலைகள்  |  இலக்கியம்  |  கதைகள்  |  கவிதைகள்  |  கட்டுரைகள்  |  அரசியல்  |  செய்திகள்  |  பின்னூட்டம்  | 
HOME


Favorites

Achalam.com
Mazhalaigal.com
Kalakad.org
Healthcareall.org
Brahmin Today.org
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Young Poet.org
kavithai kuyil
ACOE.co.in
RCC pipes.com
CIT76.com
CIT India.com
KTVR.com
Nilacharal.com
Azhagi.com

Contact us at: contact@peopleofindia.net or peopleofindia.net@gmail.com         பாரத சமுதாயம் வாழ்கவே










2009 ஜனவரி 31, நாகேஷ் மறைவு

எதிர் நீச்சல் என்னும் நாடகம் முதல் நாள் அரங்கேற்றம், மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் என்னும் அரங்கில் நடைபெற்றது முதல் காட்சி.

திரை விலகியது

மேடையில் உள்நுழையும் வழியாக திரு நாகேஷ் அவர்கள் வந்து அந்த அரங்கில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அமைப்பில் முதல் வீட்டு வாசலில் வந்து நின்று நாம் மாது வந்திருக்கேன் என்று சொல்லிவிட்டு அடுத்த வீட்டு வாசலுக்கு சென்று அங்கே நின்று, "நான் மாது வந்திருக்கேன், என்று சொல்லிவிட்டு அடுத்த வீட்டு வாசலுக்கு சென்று நான் மாது வந்திருக்கேன்" அப்ப்டீன்னு சொல்லிவிட்டு மேடையின் மையப்பகுதிக்கு வந்து பார்வையாளர்கள் இருக்கும் பக்கமாக நின்றுகொண்டு பார்வையாளர்களைப் பார்த்து நான் மாது வந்திருக்கேன் என்று சொல்வார்.

அப்படியே திரும்பி அரங்கத்தின் கடைசீ வாயிலில் சிகரெட்டைப் பிடித்தபடி நின்றிருந்த திரு பாலச்சந்தர் அவர்கள் கையைத் தட்ட ஆரம்பிப்பதற்குள் அரங்கமே கை தட்டி ஆரவாரித்துக் கொண்டிருந்தது என்றால் அதற்குக் காரணாம் அந்த, "நான் மாது வந்திருக்கேன்" என்னும் ஒரே ஒரு வசனத்தை நான்கு முறை உச்சரித்து, மொத்த ரசிகர்களையும் இயக்குனர் இமயத்தையும் தன்னுடைய அங்க அசைவுகளாலும் உச்சரிப்பினாலும் மெய்மறக்க வைத்து, ஏகோபித்த பாராட்டுக்களை அள்ளிக் குவித்து, மொத்த மனங்களையும் குத்தகை எடுத்த நாகேஷ் அவர்களே. அக்காட்கியை இன்னும் மறக்க முடியவில்லை. நடிப்புலகிலும் வாழ்விலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றிகண்ட அந்த மஹா நடிகனை கடைசீ வரையில் நம் அரசாங்கம் எந்த ஒரு அங்கீகாரமும் அளிக்காமல் வைத்திருந்தது என்பதை நினைக்கும் போது விருதுகளும் மணிமகுடங்களும் பட்டையங்களும் வீண் அல்லவா?

அந்த மகா நடிகனுக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம். உலகமே பாராட்டக் கூடிய அளவுக்குத் திறன் வாய்ந்தவர் திரு நாகேஷ் அவர்கள். அவருடைய இயற்பெயர் குண்டுராவ். அவருக்குத் தாய் நாகேஷ் என்ற பெயர் ஆரம்ப காலத்தில் அளிக்கப்பட்டது, பின்னர் நாகேஷ் அழைக்கப்பட்டார்.

ஒரு முறை கீழ்வானம் சிவக்கும் என்னும் நாடகத்தில் நான் நடிகர் சங்க அரங்கில் நடித்துக் கொண்டிருந்த போது அந்த நாடகத்தை முழுவதும் பார்த்துவிட்டு அதைப்பற்றிய கருத்துக் கணிப்புக்காக திரு நாகேஷ் அவர்கள் மேடையின் பின் புறம் இருந்த ஒப்பனை அறைக்குள் வந்தார் ,நேராகச் சென்று கையைக் கழுவி வர கைகழுவும் பீங்கான் பாத்திரத்துக்கு சென்றவர் அந்தப் பீங்கான் பாத்திரத்தில் ஒரு சக நடிகர் வெற்றிலை பாக்கு புகையிலை போட்டு துப்பியே அந்த பீங்கான் பாத்திரத்தை அசிங்கப் படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு கொஞ்சமும் அருவெருப்பில்லாமல் அந்தப் பீங்கான் பாத்திரத்தை தானே தன் கையால் சோப்பு போட்டு சுத்தப்படுத்திவிட்டு கலைமகள் வாழும் இந்த இடத்தையாவது சுத்தமாக வைத்துக் கொள்ளக்கூடாதா என்று கேட்டார், நடிப்புத்திறன் முழுமையாகக் கொண்ட அவர் கலையை எவ்வளவு மதித்தார் என்று பார்க்கையில் வியப்பேற்பட்டது எனக்கு எப்படிப்பட்ட நல்ல கலைஞன் அவர் ஆத்மா சாந்தி அடையை இறைவனை மனமார வேண்டிக்கொள்வோம்.

ஒரு முறை லூகாஸ் டீவீஎஸ் நிறுவனத்தின் ஆண்டு விழாவுக்கு நடைபெற்ற நாடகப் போட்டியில் நான் எழுதி இயக்கிய நாடகத்துக்குத் தலைமை ஏற்க வந்திருந்த திரு நாகேஷ் அவர்கள் என்னைப் பாராட்டி எனக்குப் பொன்னாடை போர்த்திய காட்சி.





Designed and maintained by: AKR Consultants