The people of India
இந்திய மக்கள்

ஆசிரியர்: தமிழ்த்தேனீ
India is rich in it's culture and heritage with various arts, religion and languages. India has given birth to great leaders history will ever remember. Let us work together to bring prosperity to Mother India overcoming all hurdles whatever be the cause.

Custom Search
 |  இல்லம்  |  கலைகள்  |  இலக்கியம்  |  கதைகள்  |  கவிதைகள்  |  கட்டுரைகள்  |  அரசியல்  |  செய்திகள்  |  பின்னூட்டம்  | 
HOME


Favorites

Achalam.com
Mazhalaigal.com
Kalakad.org
Healthcareall.org
Brahmin Today.org
Artistkidworld.com
Thamizhisai.com
Young Poet.org
ACOE.co.in
RCC pipes.com
CIT76.com
CIT India.com
KTVR.com
Nilacharal.com
Azhagi.com

Contact us at: contact@peopleofindia.net or peopleofindia.net@gmail.com         பாரத சமுதாயம் வாழ்கவே

எல்லா மதங்களுக்கும் பொதுவான தேவாலயம்

இந்தியா ஸ்வதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் மதக் கலவரங்கள், ஜாதிச்சண்டைகள் போன்றவற்றிலிருந்து விடுபட வழியில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் இந்த விவகாரங்களை ஒரு முடிவிற்குக் கொண்டுவராமல், பதவியைப் பிடிப்பதற்கு ஒரு தூண்டுகோலாகவே பயன்படுத்திக்கொள்ளுகிறார்க்ள். ஏதாவது ஒரு சின்னக் கலவரம் ஏற்பட்டால் அதில் அவதிப் படுவது சிறுபான்மை மதத்தினைச் சேர்ந்தவர்கள் என்பது மறக்க முடியாத உண்மை.

சமீபத்தில் ஏற்பட்ட கலவரங்களின் பின்னடியில் கட்டாய மதமாற்றம் என்பதை அடிப்படையாகக் கொணடு, அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவைதையே எல்லா அரசியல் கட்சிகளும் முயன்றுகொண்டிருக்கின்றன என்பதை நினைத்தால் நம்முடைய பாரத நாடு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று சொல்வது மிகப் பொருத்தம். அதே சமயத்தில் ஏல்லா மதங்ககளுக்கும் பொதுவான கிறிஸ்துவ தேவாலயம் மும்பையில் இன்றும் இருக்கிறது என்று நினைக்கும் போது புல்லரிக்கிறது. ஆம், இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஹம்மதியர்கள், பஞ்சாபிக்கள், எல்லோரும் தம்முடய மத வேறுபாடுகளை, மதக் கொள்கைகளை மறந்து ஒவ்வொரு புதன் கிழமை மும்பையிலுள்ள் மாஹிம் தேவாலயத்தை நோக்கிச் செல்லுகிறார்கள். "மாஹிம் மாதா" என்று அழைக்கப்படும் அந்த தேவலயத்தின் தேவ மாதா எல்லாருடய ப்ரார்த்தனைகளையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றி வைக்கிறாள் என்ற அசைக்க முடியாத ஆழ்ந்த நம்பிக்கையே இதற்கு மூல காரணம். "நொவீனா" என்று அழைக்கப்படும் இந்த ப்ரார்த்தனை எல்ல புதன் கிழமைகளிலும் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை நடை பெறுகிறாது. ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த "நொவீனா" ப்ரார்த்தனை ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, கொங்கணி, மராத்தி மொழிகளிலும் நடக்கிறது. 9 புதன் கிழ்மைகள் இந்த ப்ரர்ர்த்தனையை முடக்கமில்லாமல் செய்து வழிபட்டால் வேண்டுதல்கள் தங்கு தடையின்றி நிறைவேறும் என்று எல்லா மதத்தினரும் நம்புகிறார்கள். கூட்டு ப்ரார்த்தனையின் மகிமை எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று எல்லா மதத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது அதுவே ஒரு மறுக்க முடியாத உண்மை.

இந்த தேவ மாதாவின் உருவப்படம் இத்தலியின் தலை நகரமான ரோமிலிருந்து 1948ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு ஒரு புதன் கிழமை அன்று இந்த தேவலையத்தில் வைக்கபட்டது. "நொவீனா" என்று அழைக்கப்படும் இந்த ப்ரார்த்தனை சிறிய அளவில் துவங்க்கப்பட்டது. நாளடைவில் பக்தர்களால் பேசப்பட்டு எல்லா மதத்தினரிடையும் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கையை உருவாக்கியது.

"9"

இந்த எண்ணுக்குத்தான் என்ன சக்தி. இந்துக்களின் நவராத்திரி, நவ துர்கா, க்றிஸதுவர்களின் ப்ரார்த்தனை, இதையெல்லாம் பார்க்கும்போது ஏதோ ஒரு எண் என்று விட்டுவிடமுடியாது.

இந்த "செண்ட் மைக்கேல்" தேவாலயம் பழம் பெருமை வாய்ந்தது. 1510ஆம் ஆணடு பொர்த்துகீசியர்களால் மும்பாய் தீவில் நிறுவப்பட்டது. 16ஆம் நூற்றாண்டில் வியாபாரம் மற்றும் மத சம்பந்தமான விவகாரங்களில் ஈடுபட்ட போர்த்துக்கீசியர்களுக்கு 1534ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தேவாலயம் / பள்ளிக்கூடத்தை நிறுவிய பெருமை அவர்களுக்கு உண்டு. ஆனால் இந்த தேவாலயம் முகலாய சக்கரவர்த்தி ஔரங்கசீப்பினால் ஏவி விடப்பட்ட "சிடிஸ்" என்ற கூட்டத்தினாரால் இடித்து அழிக்கப்பட்டது. 1710ஆம் ஆண்டு இந்த தேவாலயம் அதே இடத்தில் புதுப் பொலிவுடன் நிறுவப்பட்டது. சரித்திரத்தில் மும்பை மாஹிம் கடற்கரையை எதிர்கொண்டுள்ள "செண்ட் மைக்கேல்" மிகப்பெரிய அழகான தேவாலயம் என்று பெயர் பெற்றது. இந்த தேவலயத்தின் முன்னால் நிறுவப்பட்ட மரத்தினால் செய்யப்பட்ட சிலுவை மும்பை முனிசிபல் கார்பொரேஷனால் சாலை விரிவாக்கப் பணியில் எத்தனையோ முறை முயன்றும், இந்த சிலுவையை நகர்த்த முடியவில்லை. 400 வருடமாகியும் கடலின் உப்புக் காற்றில் இந்த சிலுவை பழுதுடையாமல் இன்றும் கம்பீரமாக இருந்து கொண்டிருக்கிற்து.

நீலகண்டன்



Designed and maintained by: AKR Consultants